business

img

மீண்டும் உயரத் துவங்கிய பெட்ரோல் - டீசல் விலைகள்.... பெட்ரோல் 45 காசுகளும், டீசல் 51 காசுகளும் உயர்வு..

புதுதில்லி:
கடந்த 29 நாட்களுக்குப் பின் பெட்ரோல் - டீசல் விலைகள் மீண்டும்உயரத் துவங்கியுள்ளன. ஜனவரி 6, 7 ஆகிய 2 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை 45 காசுகளும், டீசல்விலை 51 காசுகளும் அதிகரித்துள்ளது.

கடந்த 2019 மார்ச்சில், கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டது. இதனால் தொடக்கத்தில் பெட்ரோல் - டீசல் விலைகள் மாற்றமின்றி இருந்தன. ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. நவம்பர்20-க்குப் பிறகு டிசம்பர் 7 வரை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை 17 மடங்கு உயர்த் தின. அதன்பின் டிசம்பர் 7 முதல் 2021 ஜனவரி 5 வரை பெட்ரோல் - டீசல் விலைகள் உயரவில்லை. 

இந்நிலையில், 2021 ஜனவரி, 5, 6 ஆகிய 2 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 45 காசுகளும், டீசல் விலை 51 காசுகளும் உயர்ந்துள்ளது. வியாழனன்று ஒரே நாளில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 26 காசுகளும் உயர்ந்துள்ளது.ஜனவரி 5 அன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 86 ரூபாய் 51 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இது 6-ஆம் தேதி 86 ரூபாய் 75 காசுகள் என்றும், 7-ஆம் தேதி 86 ரூபாய் 96 காசுகள் என்றும் உயர்ந்துள்ளது. இதேபோல ஜனவரி5 அன்று 79 ரூபாய் 21 காசுகளாக இருந்த டீசல் விலை ஜனவரி 6-ஆம் தேதி 79 ரூபாய் 47 காசுகளாகவும், ஜனவரி 7-ஆம் தேதி 79 ரூபாய் 72 காசுகளாகவும் உயர்ந்துள்ளது.

;